En Uyirai ~ Satheeskanth ~ sagishna ~ Sricharan ~ Anfal Nahas
பல்லவி
என் உயிரை அவள் கண்ணில் ஒட்டிக்கொண்டாளோ
என் நெஞ்சை அவள் பின்னால் கட்டிச் சென்றாளோ
விழி வழி வந்து கனவுகள் தந்தாய்
சில நொடிகளில் இதயத்தைத் தின்றாய்
தொடுநிலவென தொலைவினில் சென்றாய்
அருகினில் வர கானல் பூவானாய்…பெண்ணே…
என் மூச்சில் மழை வாசம் விட்டுச் சென்றாளோ
என் பேச்சில் பூவாசம் ஏற்றிச் சென்றாளோ
சரணம் – 1
என் தவம் உந்தன் பூமுகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
என் தவம் உந்தன் பூமுகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
வரைமுறையின்றி பரவசம் தந்தாய்
இடைவெளியின்றி நினைவினில் நின்றாய்
கடலலையென வருடி நீ சென்றாய்
நீயின்றிப் போனால் என்னாவேன் அன்பே…
சரணம் – 2
வா அன்பே உயிர் உன் வசம்
நீ தொட தேகம் துளிர் விடும்
விடை இல்லா வினா ஆயிரம் என்னிடம்
பதில் கண்டேன் நிலா தேவதை உன்னிடம்
என் வானில் விண்மீன்கள் கொட்டிச் சென்றானோ
என் காற்றில் மகரந்தம் விட்டுச்சென்றானோ